இந்தியாவிற்கு 'காதலர் தினம்' தேவையா?

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (06:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கி கொடுத்து இந்த நாள் முழுவதையும் சந்தோஷமாக இருப்பார்கள்

இந்த நிலையில் இந்திய கலாச்சாரத்திற்கு காதலர் தின கொண்டாட்டம் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டுக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக பற்று வைத்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் சொந்தக்காலில் நிற்பது, காதல், திருமணம், விவகாரத்து என்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணம். அன்பு, பாசத்திற்கு பஞ்சம் உள்ள வெளிநாடுகளில் அன்பை வெளிப்படுத்த என ஒருநாளை கொண்டாடுவது சரிதான்

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் குடும்பம் குடும்பமாக வாழ்வது, தினமும் பாசத்தை அள்ளி அள்ளி வழங்குவது, குடும்பத்திற்காக ஒருசிலர் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வது, காதலுக்காக உயிரையும் தர தயாராக இருப்பது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நமது கலாச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் அன்பு செலுத்தும் நாளாக இருப்பதாக அன்பு செலுத்துவதற்காக என ஒரு தனி நாள் கொண்டாட்டம் தேவையில்லை என்றே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உழைப்பு, தனி மனித வருமானம் அதிகரிப்பு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது, அரசின் விதிகளை சரியாக பின்பற்றுவது போன்ற வெளிநாட்டவர்களின் நல்ல பழக்கத்தை கடைபிடிக்காமல் புத்தாண்டு கொண்டாட்டம், கொண்டாட்த்தில் மது அருந்துவது, அதனால் ஏற்படும் உயிரிழப்பு, காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஆகியவை நமது நாட்டிற்கு தேவையில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :