செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (14:00 IST)

பூனையை விரைவுத் தபாலில் அனுப்பி சிக்கலில் மாட்டிய இளைஞர்...

தான் வைத்துகொள்ள விரும்பாத பூனை ஒன்றை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தவருக்கு தைவானில் பெருந்தொகை ஒன்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,
அட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அந்த நபர் அனுப்பி வைத்தார்.
யாங் என்ற குடும்ப பெயருடைய 33 வயதான அவருக்கு, தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 60 ஆயிரம் நியூ தைவான் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக மேலும் 30 ஆயிரம் நியூ தைவான் டாலர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு காணொளியை வைத்து இந்த பூனையை அனுப்பியவரை நியூ தைவான் நகர விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்டது.
 
அனுப்பிய யாங் என்பவரை தொடர்பு கொண்டபோது, தன்னால் இந்த பூனையை கவனிக்க முடியவில்லை என்றும், முன்பு காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த பூனையால் சரியாக நடக்க முடியவில்லை என்றும் அக்குபஞ்சர் மற்றும் பாரம்பரிய மூலிகை சிகிச்சை போன்றவற்றை அளித்த பின்னரும் இது நலமடையவில்லை எனறும் கூறியுள்ளார்.
 
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள விலங்குகள் நிறுவனத்தின் இயக்குநர் சென் யுயான்-ச்சுன், "போதிய காற்றோட்ட வசதி இல்லாத மற்றும் சுத்தமான நீர் செலுத்த வசதியில்லாத கொள்கலனில், ஒரு விலங்கு மூச்சுத்திணறி இறந்துவிடலாம். தங்களின் செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியவில்லை என்றால், அதற்கே உரித்தான முறையான வழிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.