1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Bill gates suffered with corona

உலகத்தை எச்சரித்த பில்கேட்ஸுக்கே கொரோனா ! - அதிர்ச்சி தகவல்

Bill Gates

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வரும் நிலையில் பல கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வந்தாலும் மீண்டும் புதிய வேரியண்டுகள் உருவாகி வருகின்றன.

 

இந்நிலையில் கொரோனா வருவதற்கு முன்னரே பெருந்தொற்று குறித்து உலக நாடுகளை எச்சரித்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ். தற்போது அவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் பில்கேட்ஸ் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ராஜபக்சே வழியில் நடந்தால் இதுதான் கதி! – திருமாவளவன் கருத்து!