திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (21:13 IST)

இளையராஜா விவகாரம்: ஈவிகேஎஸ். இளங்கோவன், கி.வீரமணி மீது வழக்குப் பதிவு !

இசைஞானி இளையராஜாவை தரக்குறைவாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியைப் பற்றி எழுதிய புத்தகத்திற்கு இசை ஞானி இளையராஜா முன்னுரை எழுதினார். அதில், அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு எழுதினார். இதற்கு நாடு முழுவதும் கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், இதை தான் திரும்ப பெறப்போவதில்லை என இளையராஜா கூறினார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், இளையராஜாவை தரக்குறைவாகவும் அவமரியாதையுடனும்  பேசினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசி உள்ளதாகவும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தி கலவரம் தூண்டக்கூடிய வகையில் பேசியதாகவும், அவரை எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 

இந்த புகாரை சென்னை அடையாறு சேர்ந்த மூர்த்தி என்பவரை அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில்,கி,வீரமணி, இளங்கோவன் மீது  வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.சி. எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.