1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (12:47 IST)

கொரோனா வைரஸால் மூன்றரை கோடி பேர் இறப்பார்கள்? – ஒரு வருடம் முன்னரே சொன்ன பில்கேட்ஸ்!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இதுகுறித்து முன்னரே பில்கேட்ஸ் பேசியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தாய்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பகுதிகளிலும் வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து முன்கூட்டியே பில்கேட்ஸ் கடந்த ஆண்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் பேசிய பில்கேட்ஸ் ”உலகம் முழுவதையும் ஒரு சூப்பர் வைரஸ் தாக்க இருப்பதாகவும், அந்த வைரஸ் தாக்குதலினால் 6 மாதத்தில் மூன்றரை கோடி பேர் உயிரிழப்பார்கள். அந்த வைரஸால் ஒரு பெரிய உலகப்போர் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

அவர் வைரஸின் பெயர் கொரோனா என சொல்லாவிட்டாலும், அவர் சொன்னது போலவே வைரஸ் பரவியுள்ளதும் மக்கள் பலியாகியுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என சதிகோட்பாட்டாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.