புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (08:41 IST)

கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!

சீனாவில் திடீரென பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலால் 106 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவிய இந்த வைரஸ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 80 ஆக இருந்தது. இன்று வரை 106 ஆக உயர்வடைந்துள்ள பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வைரஸ் தாக்கியதில் 500க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 பேர் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான், தாய்லாந்து, கொரியா போன்ற மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவிய நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.