புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (18:23 IST)

பிப்ரவரி 1 முதல் வாட்ஸ் ஆப் இயங்காது…

பிப்ரவரி 1 முதல் சில ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் உலகில் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் ஆப் ஆகும். இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சில ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கும் iOS-களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, Android 2.3.7 வெர்ஷனுக்கும் அதற்கு முந்திய வெர்ஷன்களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், iOS 8 மற்றும் அதற்கு முந்திய மாடல்களுக்கும் வாட்ஸ் ஆப் இயங்காது. மேலும் விண்டோஸ் ஃபோன்களிலும் வாட்ஸ் ஆப் இயங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.