திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (10:13 IST)

பென்னி குயிக் கல்லறை – இங்கிலாந்தில் சேதம்!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணி குயிக்கின் இங்கிலாந்து கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக்குக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், ஆண்டுதோறும் திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதி மக்கள் அவருக்காக பொங்கல் இட்டு வழிபட்டு வருகின்றனர்.அந்த அளவுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் பென்னி குயிக்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள அவரது கல்லறையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் இப்போது பரவி வருகிறது.