உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...
திமுக கூட்டணியில் கடந்த 8 வருடங்களாகவே காங்கிரஸ் நீடித்து வருகிறது.. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை காங்கிரஸ் கையில் எடுத்தது. அதேபோல் சட்டமன்றத் தேர்தல் 40 தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்டது..
ஆனால் இந்த இரண்டையுமே ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என கூறினார். மேலும், காங்கிரஸுடன் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உங்களுக்கு 40 தொகுதிகளை கொடுக்க முடியாது... 25 தொகுதிகளை கொடுக்கிறோம் என சொன்னது திமுக. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை..
எனவே கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று பா.சிதம்பரம் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் 39 தொகுதிகளைக் கேட்டதாக தெரிகிறது.. ஆனால் ஸ்டாலின் அதை ஏற்கவில்லை.
தற்போது நேற்று சிதம்பரத்திடம் சொன்ன அதே 28 தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.. இதன் மூலம் திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததோடு, திமுக - காங்கிரஸ் கூட்டணியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்..