1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin choosed two mp for the election

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

mk stalin
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதியோடு முடிவடைகிறது. திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக்காலமும் அதிமுகவின் தம்பிதுரை மற்றும் ஜிகே வாசன் ஆகியோரின் பதவி காலமும் முடிவடையவிருக்கிறது.

10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில், திமுக மாநிலங்களவை வேட்பாளராக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்..

திமுகவுக்கு மீதமுள்ள இரண்டு மாநிலங்களவையில் ஒன்று தேமுதிகவுக்கும், ஒன்று காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக தேமுதிகவில் பிரேமலதவின் சகோதரர் சுதீஷ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது..
அடுத்த கட்டுரையில்
திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...