வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (17:53 IST)

கேட்ட இழுத்து மூடுங்கடா... அதிரடி காட்டிய சீனா!!

இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் யாரும் சீனாவுக்கு நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்தியாவில் மட்டும்கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 724ஆக உயர்ந்துள்ளது . இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், சீனாவில் தற்போது கொரோனா பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வந்துள்ளது. 
 
இந்நிலையில் சீனா வெளிநாட்டில் இருந்து வரும் யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. சீன விசா பெற்றிருப்பவர்கள், சீனாவில் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் வெளிநாட்டினராக இருந்ததால் சீனாவுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தற்காலிக உதரவு தான் என்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.