1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (17:40 IST)

கொரோனாவின் காதலி யார்..? புதுசு புதுசா யோசித்து தூதன தண்டனை கொடுக்கும் காவலர்கள்!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 724ஆக உயர்ந்துள்ளது . இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஒரு சில பொது மக்கள் அதனை சரியாக பின்பற்றாமல். வைரஸின் தாக்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்  வாகனங்களில் சுற்றி திரிந்து காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சாலையில் வாகனங்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து கொரோனா குறித்த கேள்விகள் அடங்கிய question paper ஒன்றை கொடுத்து சாலை ஓரங்களில் அமரவைத்து டெஸ்ட் வைத்துள்ளனர் காவல்துறையினர். அதில் கொரோனாவின் காதலி யார்? என்ற கேள்வி தான் ஹைலைட்... இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பீங்கன்னு தெரிந்திருந்தால் வெளியவே வந்திருக்கமாட்டேன் என வாகன ஓட்டிகள் டெஸ்ட் எழுதுகின்றனர். இப்படி புதுசு புதுசாக யோசித்து தண்டனை கொடுக்கும் காவலர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.