1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (20:06 IST)

நடிகர் அல்லு அர்ஜூன்.. ரூ. 1.25 கோடி நிதி உதவி ... வைரலாகும் ’’இன்ஸ்டா வீடியோ’’

கொரொனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் நிதி உதவி வழங்கிய நிலையில் , சிரஞ்சீவியின் தம்பியும்  ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் பவன் கல்யான் ரூ.2 கோடி உதவி அளித்துள்ளார்.  அதில், ஆந்திரா ம் தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அளிப்பதாகவும்,மேலும்  ரூ. 1 கோடி நிதியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில், பாகுபலி 1, 2 , சாஹோ ஆகிய படங்களில் கம்பீரமாக நடித்து இந்தியா முழுவதிலும் ரசிகர்களைச் சம்பாதித்துள்ள நடிகர் பிரபாஸ்  கொரொனா பாதிப்புக்காக ரூ.4 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஜுனியர் என்.டி.ஆர் ரூ. 75 லட்சம், மகேஷ் பாபு ரூ.1 கோடி, நிதி உதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல நடிகர் அல்லி அர்ஜூன் 1.25கோடியை நன்கொடை அளிக்கிறேன்… நாம் அனைவரும் இணைந்தி கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.