1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (17:23 IST)

வரிவிலக்கு உண்டு... கொரோனா தடுப்பு நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள் !

கொரொனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு பொதுமக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில்,  கொரொனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புவோர் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் 117201000000070 IFSC : IOBA0001172 இல் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001 Indian Overseas Bank இல் நிதியுதவி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை வருமான வரிச் சட்டப்பிரிவு 80 (G) இன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.