ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (17:05 IST)

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மனித இனத்திற்கே சவாலாகும் வகையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வரும் நிலையில் கொரோனா வைரஸ், ஏழை எளியோர் என எந்த பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது 
 
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவலை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக பிரதமர் போரீஸ் ஜான்சன் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
 
இதுகுறித்து போரீஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் தெரிவித்தபோது, ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ரத்த பரிசோதனை செய்தேன். அதில் பாசிட்டிவ் என்பது உறுதியாகியதால் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். இருப்பினும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அரசை நடத்த தேவையான உத்தரவை பிறப்பித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது நாட்டின் இளவரசர் மற்றும் பிரதமருக்கே கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது