1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Artificial third breast created in a fashion show

மூன்றாவது மார்பகம்: பேஷன் உலகின் புதிய டிரெண்ட்

மூன்றாவது மார்பகம்
பேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை மாறுபட்ட கோணத்தில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற மிலான் வீக்கில் இதுவரை யாருமே பயன்படுத்தாத புதிய உத்தி ஒன்று களம் இறக்கப்பட்டது.
 
மேடையில் அலங்காரமான பெண் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தபோது, பார்வையாளர்களின் கண்கள் அந்த மாடலின் மீதிருந்து அகலவேயில்லை. 
 
மாடலின் அழகோ, ஆடையோ, அலங்காரமோ, ஒப்பனையோ யாருடைய கண்ணிலும் படவில்லை. அனைவரையும் ஈர்த்தது மாடலின் மூன்றாவது மார்பகம்...
 
சாதாரணமான, இயல்பான ஒப்பனையில் நீல வண்ண ஆடை அணிந்திருந்த பெண் மேடையில் நடந்து வந்தபோது, அவரது இரு மார்பகங்களுக்கு நடுவில் மூன்றாவது மார்பகம் முளைத்ததுபோல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த மூன்றாவது மார்பகம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ப்ரோஸ்தெசிஸ் மார்பகம். இதற்கு ஏற்ப பெண்ணின் இயற்கையான மார்பகமும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
போராட்டக்காரர்களை கைது செய்யக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை