வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (21:15 IST)

ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைக்கு பாலூட்டும் நடிகையின் சர்ச்சை புகைப்படம்

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது இரட்டை குழந்தைக்கு ஒரே நேரத்தில் பாலூட்டும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல அமெரிக்க நடிகை கிறிஸ்ஸி டெய்ஜென், ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர். இவருக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவிக்கும்.  
 
இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்ற 2 வயது குழந்தையுள்ள நிலையில் சமீபத்தில் இவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதனால் ஜான் லெஜண்ட்-கிறிஸ்ஸி தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கிறிஸ்ஸி தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பெண்கள் அமைப்பு உள்பட பலரிடம் இருந்து கடும் விமர்சனங்கள் வந்திருந்தாலும் இந்த புகைப்படம் 29 லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கிறிஸ்ஸி டெய்ஜென் தற்போது அமெரிக்க அதிபரின் விமர்சகராக இருந்து வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.