வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (09:33 IST)

ஆபாச படங்களை ஒளிபரப்பிய விமான நிலையம்! – அதிர்ச்சியடைந்த பயணிகள்!

Rio De Janeiro
பிரேசிலில் விமான நிலையத்தில் அறிவிப்பு திரையில் ஆபாச படங்கள் ஒளிபரப்பான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பிரபலமாக உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்று பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ. இங்கு பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் நிலையில் ரியோ டி ஜெனிரோ விமான நிலையம் எப்போது பயணிகள் கூட்டமாகவே இருக்கும்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பயணிகள் பிஸியாக இருந்த நேரம் விமான நிலைய விளம்பர அறிவிப்பு திரைகளில் திடீரென ஆபாசப்படங்கள் ஒளிபரப்பானது. அதை கண்டு பலர் அதிர்ச்சியானாலும், சிலர் சிரித்து விட்டு அதை புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

ஆபாச படம் ஒளிபரப்பானது ஏதாவது ஹேக்கர்களில் கைவரிசையாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ரியோ விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.