ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 23 மே 2022 (17:15 IST)

பராமரிப்பாளரின் விரல்களை கடித்து துப்பிய சிங்கம் ! வைரலாகும் வீடியோ

lion
ஜமைக்காவில் உள்ள மிருகககாட்சி சாலையில் பராமரிப்பாளரின் விரலை சிங்கம் ஒன்று கடித்துக் குதறிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் சிங்கம் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பரமரிப்பாளர் கூண்டிற்குள் இருந்த சிங்கத்தைத் தொட முயன்றார்.  அவரைப் பார்த்து உருமியது சிங்கம். ஆனால் தொடந்து பராமரிப்பாளர் சிங்கத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஆவேசம் அடைந்த சிங்கம், அவரது விரலை கடித்துக் குதறியது. இதில்,அவரது விரல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை சுமார் 15 பேர் வேடிக்கை பார்த்து அதை வீடியோவில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.