திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (12:36 IST)

தூய்மையான விமான நிலையங்கள்; மதுரை முதலிடம்!

மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் செயல்பாட்டில் 34 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் மதுரை விமான நிலையமும் ஒன்றாகும். இங்கிருந்து உள்நாட்டின் முக்கியமான நகரங்களுக்கும் ஒருசில வெளிநாடுகளுக்கும் விமான சேவை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் முதலிடத்தையும், பயணிகள் சேவைத்தர மதிப்பீட்டில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மாற்றவும் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.