1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மே 2022 (11:46 IST)

மீண்டும் ஆப்கானிஸ்தானில் விமான சேவை - UAE தாலிபன்கள் கூட்டு!!

ஆப்கானிஸ்தானில் விமான நிலையங்களை இயக்குவது குறித்து தலிபான்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஒப்பந்தம்.  

 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுமுதலாக ஆப்கானிஸ்தான் சட்டத்திட்டங்களில் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் விமான நிலையங்களை இயக்குவது குறித்து தலிபான்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களும் ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பறக்கத் தொடங்கும் என தலிபான்கள் தெரிவித்துள்ளன. 
 
ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக  பல்க், ஹெராத், காந்தஹார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.