வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (13:23 IST)

காதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த காதலன்.. கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூரம்

ரஷ்யாவை சேர்ந்த, இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற இளம்பெண்ணை, அவரது காதலனே கொன்று சூட்கேஸில் அடைத்து வைத்த கொடூரம் நடந்துள்ளது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எக்கட்டரினா கரெக்லனோவா என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர். இவர் வித்தியாசமாக தன்னை ஃபோட்டோ ஷூட் செய்துகொண்டு, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்வார். அதனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வந்தனர். இதை தொடர்ந்து இவருக்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பெருகினர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் எக்டரினா திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் எக்கட்டரினா தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. மேலும் அது மிகவும் கனமாக இருந்துள்ளதால் அதை திறந்து பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸின் உள்ளே எக்கட்டரினா பிணமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து எக்கட்டரினா தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், எக்கட்டரினாவின் முன்னாள் காதலர் சூட்கேஸுடன் செல்லும் காட்சியை பார்த்த்ள்ளனர். இதனையடுத்து உடனே முன்னாள் காதலரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது எக்கட்டரினா தன்னை கைவிட்டு புதிய காதலருடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டு இருந்ததால், ஆத்திரத்தில் அவரை கத்தியால் பல குத்தி கொன்று சூட்கேஸில் அடைத்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் எக்டரினாவின் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.