பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல் செய்யும் மாடல் அழகி – இன்ஸ்டாவில் வெளியான புகைப்படங்கள்

ishaan kishan
Last Updated: வெள்ளி, 19 ஜூலை 2019 (18:11 IST)
இந்தியாவின் ஏ பிரிவு அணியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் மாடல் அழகி ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா கிரிக்கெட் அணியின் ஏ பிரிவு அணியை சேர்ந்தவர் இஷான் கிஷான். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் விளையாடினார். இவர் நேற்று தனது 21வது பிறந்தநாளை தனது அணியினருடன் கொண்டாடினார்.

இஷான் கிஷானுக்கும் மாடல் அழகி அதிதி ஹுண்டியாவுக்கும் காதல் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாக்ராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மும்பை இந்தியன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் நடந்த இறுதி போட்டியை காண அதிதி வந்திருந்தார்.

ஆனாலும் அந்த புகைப்படங்கள் அவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாக்ராம் அக்கவுண்டிலிருந்து பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :