திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:22 IST)

ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் சமையல் போட்டியில் வென்ற இந்தியர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மதுரையை சேர்ந்த சசி செல்லையா, சிங்கப்பூரில் வளர்ந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார் சசி. இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் கலைஞர்களுக்கான 'ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018' என்கிற சமையல் போட்டியில் கலந்து கொண்டார்.
 
அதில் சிறப்பாக சமையல் செய்து மாஸ்டர் செஃப் பட்டத்தை தட்டி சென்றார். அவருக்கு பரிசாக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.