ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (19:22 IST)

இந்தியர்களுக்கு ஸ்பெஷல் விசா; ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வொருக்கு 48 மணிநேர இலவச பயண விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்துதான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகரிக்க புதிய விசா முறையை அறிவித்துள்ளனர்.
 
அதன்படி இந்தியாவில் இருந்து அரபு அமீரக நாடுகளுக்கு பயணம் செய்ய தற்போது 48 மணி நேர இலவச பயண விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் குறைந்த நாட்கள் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.