சொன்னா கேளுங்க சீனா சவகாசம் வேண்டாம்! – பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!
சீனாவுடன் வர்த்தக வழித்தடம் அமைக்கு பாகிஸ்தானின் முயற்சிக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் - சீனாவுடன் வர்த்தக வழித்தடம் ஏற்படுத்த இரு நாடுகளிடையே ஒப்பந்தமாகியுள்ளது. சீனாவிலிருந்து பலுசிஸ்தான் குவாடார் துறைமுகம் வரை நீளும் இந்த வர்த்தக வழிதடத்தால் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் மேம்பாடு அடையும் என கூறப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே பாகிஸ்தான் – சீனா இடையேயான இந்த வணிகப் பாதை குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பேசிய அமெரிக்காவின் ஆசிய நாடுகள் விவகாரங்கள் துறை அதிகாரி ”இந்த வணிக பாதையால் பாகிஸ்தானுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஆனால் சீனாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த வணிக பாதையை ஏற்படுத்துவதில் கூட சீன நிறுவனங்களும், சீன ஊழியர்களுமே நியமிக்கப்படுவதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். வேலையில்லா பாகிஸ்தான் மக்களுக்கும் இந்த பணியில் இடம் அளித்திருக்கலாமே!” என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சு பாகிஸ்தானை சீனா பயனபடுத்திக் கொள்கிறது என்னும் தோனியில் இருக்கிறது. மேலும் பாகிஸ்தானை இந்த திட்டத்திலிருந்து வெளியேற செய்ய அமெரிக்கா மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.