தொடர்புடைய செய்திகள்
- AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..
- நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!
- அதானி குழுமத்திற்கு ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி இழப்பு!.. காரணம் இதுதான்!..
- நாளை புத்தாண்டு.. இன்று ஸ்டிரைக் செய்யும் ஸோமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட் , ஜெப்டோ ஊழியர்கள்..!
- 1 கோடி கிலோ நெய் .. ஒரே நபர் 2,417 மேகி பாக்கெட்டுக்கள் .. 2025ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள்..!
இனி ஏர்போர்ட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் போடலாம்.. Blinkit புதிய முயற்சி..!
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல், இந்தியாவின் முதல் 'இன்-டெர்மினல்' விரைவு வணிக சேவையை Blinkit நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் பிளிங்கிட் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், பயணிகள் இனி விமான நிலையத்தின் உள்ளேயே அத்தியாவசிய பொருட்களை மொபைல் செயலி வழியாக ஆர்டர் செய்யலாம்.
பயணிகள் போர்டிங் கேட், லவுஞ்ச் அல்லது உணவக பகுதிகளில் இருந்தபடியே பயண சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், தின்பண்டங்கள் மற்றும் மருந்துகளை ஆர்டர் செய்து தங்களின் இருப்பிடத்திற்கே வரவழைக்க முடியும். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும்.
இந்த தனித்துவமான சேவை பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்துவதோடு, இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
பிளிங்கிட் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அதன் தாய் நிறுவனமான எடர்னல் பங்குகள் பங்குச்சந்தையில் 3.34 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. மும்பை விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Edited by Siva
