வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (13:11 IST)

இலங்கைக்கு 360 கோடியை அள்ளிகொடுக்கும் இந்தியா?? எதற்காக??

இலங்கைக்கு 360 கோடியை அள்ளிகொடுக்கும் இந்தியா?? எதற்காக??
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ராஜபக்‌ஷேவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேச பாதுகப்பு, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சனைகள், உளவு தகவல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா 5 கோடி டாலர், அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.360 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் என உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு 360 கோடியை அள்ளிகொடுக்கும் இந்தியா?? எதற்காக??

முன்னதாக ரஷ்யா, இலங்கை பாதுகாப்பு திறனை மேம்படுத்த நிதி உதவி அளிப்போம் என கூறியிருந்த நிலையில் தற்போது இந்தியா 360 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.