புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (15:35 IST)

ரஜினி இலங்கைக்கு வர ”நோ தடா”.. ராஜபக்‌ஷே மகன் அறிவிப்பு

ரஜினி இலங்கைக்கு வர எந்த தடையும் இல்லை என ராஜபக்‌ஷே மகன் நாமல் ராஜபக்‌ஷே அறிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்நிலையில் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு ரஜினியை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அரசியல் நடவடிக்கைகாக இலங்கைக்கு வரும் ரஜினிக்கு இலங்கை அரசு விசா தர மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் மகன், நாமல் ராஜபக்‌ஷே ”ரஜினி இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். மேலும் “நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.