வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (08:26 IST)

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர் உள்துறை அமைச்சர்: ஆப்கனின் புதிய அமைச்சரவை

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர் உள்துறை அமைச்சர்: ஆப்கனின் புதிய அமைச்சரவை
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி ஒருவரை அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் தற்போது அவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சர்வதேச பயங்கரவாதி என குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த அப்துல்கானி என்பவர் உள்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது அமெரிக்க அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சட்டங்களை கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சரா? என்ற கேள்வி ஆப்கன் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது