வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:09 IST)

என்னென்ன பண்றாங்க பாருங்க… அலங்கார விளக்கான தடுப்பூசி குப்பிகள்! – செவிலியரின் செம ஐடியா!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி குப்பிகளை கொண்டு செவிலியர் ஒருவர் அலங்கார விளக்கு செய்துள்ளது வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதேசமயம் உலகம் முழுவதிலும் கொரோனா காரணமாக மருத்துவ கழிவுகள் சேர்வதும் அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவ கழிவுகளை அகற்ற முடியாமல் பல நாடுகள் சிரமத்தை கண்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் கோலராடோ பகுதியை சேர்ந்த செவிலியர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் மீந்த தடுப்பூசி குப்பிகளை சேகரித்து அதை வைத்து மாளிகைகளில் தொங்கும் வகையிலான அலங்கார விளக்கை வடிவமைத்துள்ளார்.. செவிலியரின் இந்த வடிவமைப்பு ட்ரெண்டாகியுள்ளதுடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.