அதிபர் பதவிக்காக மோதிக்கொள்ளும் தாலிபான்கள்? – அப்துல் கனி பரதர் காயம்!
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி நியமனம் குறித்து தாலிபான்களுக்குள் மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மொத்த நாட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அங்கு ஒரு நிலையான ஆட்சி மற்றும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்படாத சூழல் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபராக தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் நியமிக்கப்படுவார் என்றே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான பேச்சு வார்த்தையில் தாலிபான்கள் மற்றும் ஹக்கானி வலைகுழுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் தாலிபான் தலைவர் அப்துல் கனி பரதர் காயம்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஆப்கானிஸ்தானில் நிலையான அரசு அமைவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.