திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:32 IST)

ஆப்கன் செய்தி தொலைக்காட்சியில் மீண்டும் பெண் தொகுப்பாளர்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெண் தொகுப்பாளர்கள் செய்தி வழங்கும் சேவை இன்று மீண்டும் தொடர்ந்துள்ளது.

இந்த தகவலை அந்நாட்டில் பிரபலமான டோலோ டிவி செய்திப்பிரிவு தலைமை நிர்வாகி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார். அதில், தாலிபன் ஊடகப்பிரிவு உறுப்பினர் ஒருவருடன் நேரலையில் பெண் தொகுப்பாளர் நேர்காணல் செய்யும் காட்சியின் படம் பகிரப்பட்டுள்ளது. இது தவிர செய்தி அறையின் காலை கூட்டத்தில், பெண் செய்தியாளர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு பங்கேற்கும் படத்தையும் தனியாக அவர் பகிர்ந்துள்ளார்.