தப்பியோடிய ஆப்கன் அதிபர் இருப்பது இந்த நாட்டிலா?
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி தப்பி ஓடிய நிலையில் அவர் கஜகஸ்தான் என்ற நாட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வேறு நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் தலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் தன்னுடன் கோடிக்கணக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கானி, கஜகஸ்தான் என்ற நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஓமன் நாட்டில் இருப்பதாக ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் நான்கு கார்கள் நிறைய பணம் எடுத்துச் சென்று இருப்பதாகவும் அவை மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடையது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் ஓமன் நாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர் இருப்பதை அந்நாட்டு அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது