திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (21:47 IST)

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மக்களுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அரசு தெரிவித்துள்ளது
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது அரசியல் சூழல் மாறி உள்ளதை அடுத்து அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அடைக்கலம் தர வேண்டும் என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளை ஐநா கேட்டுக் கொண்டுள்ளது 
 
இந்த நிலையில் பிரான்ஸ் இதுகுறித்து தனது உறுதிமொழியை கொடுத்துள்ளது. ஆப்கன் மக்களுக்கு ஆதரவளிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற நாடும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது