1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (21:25 IST)

ATM -க்குள் படம் எடுத்து ஆடிய மலைப் பாம்பு...மக்கள் அதிர்ச்சி ... வைரல் போட்டோ

ஆஸ்திரேலியா நாட்டில் நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில், பாம்பு படம் எடுத்து ஆடியதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில்,  நியூசவுத் வேல்ஸ் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம் மையத்தில், ஒரு பெண் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
 
அப்போது, ஏடிஎம் மெஷினில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போனார்.
 
இதுகுறித்து, மக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள்ளாகவே அந்தப் பாம்பை செல்போனில்  படம் பிடித்தனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.