செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:32 IST)

ஏடிஎம்-ல் 200 க்கு பதில் 500; குஷியான மக்கள்

ஏடிஎம்-ல் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்ததால் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சேலம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் ஒருவர் 200 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஏடிஎம் மிஷினில் பாஸ்வேர்ட் கொடுத்து 200 ரூபாய் எடுப்பதற்காக “2-0-0” என்ற எண்களை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு 500 ரூபாய் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பரவியவுடன் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டி பணம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.