தமிழகத்திற்கு மீண்டும் மழை! சென்னைக்கு எப்படி??

Sugapriya Prakash| Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (17:09 IST)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில தினகங்களுக்கு முன்னர் க்யார் என்னும் புயல் உருவாகியிருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து கேரளாவிலிருந்து 300 கிமி தொலைவில் மஹா புயல் உருவானது. இந்த மழை தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் உருவாக்காவிட்டாலும் மழையை கொடுத்தது. 
 
இதன் பின்னர் கடந்த இரு தினகங்களாக சென்னையில் நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அதேபோல  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள்4, 5 ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும், 6, 7, 8 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துளது. 


இதில் மேலும் படிக்கவும் :