1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (16:15 IST)

ஏ.டி.எம். மிஷினை குண்டு வைத்து உடைத்த கொள்ளையர்கள்..

ஏடிஎம் மிஷினை குண்டு வீசி உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், கட்னி மாவட்டம் , பாகல் என்னும் பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த ஏடிஎம் மிஷினை குண்டு வீசி உடைத்துள்ளனர் கொள்ளையர்கள்.

அதன் பின்பு அந்த ஏடிஎம் மிஷினில் வெறும் 10 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் கொள்ளையர்கள் மிகுந்த மனவேதனையுடன் தப்பி சென்றனர். இது குறித்து போலீஸாரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் 3 கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அப்பகுதியில் இதற்கு முன் இரண்டு முறை இது போன்று குண்டு வீசு ஏடிஎம் மிஷினில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.