1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By siva

இந்தியா உள்பட 135 நாடுகளில் டெல்டா வைரஸ்: மிக வேகமாக பரவுவதாக தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கும்போது மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது 
 
மூன்றாவது அலையில் டெல்டா வைரஸ் என்ற வீரியமிக்க வைரஸ் பரவி வருவதாகவும் இந்தியாவில் ஏற்கனவே இந்த வைரஸ் பரவி பலரை பாதித்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் உலகில் 135 நாடுகளில் தற்போது பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
இந்த டெல்டா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக 2 நோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதனை அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது