வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (08:04 IST)

சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சைனா போன் வெடித்து சிதறல்.. உயிர் தப்பிய முதியவர்..!

முதியவர் ஒருவர் சட்டை பாக்கெட்டில் சைனா போன் வைத்திருந்த நிலையில் அந்த போன் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த திருச்சூர் என்ற பகுதியில் 70 வயது முதியவர் டீக்கடையில் வந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப் பையில் வைத்து இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.
 
 இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து சட்டையை உடனடியாக கழட்டி வெளியே வீசினார். இதனால் அவருக்கு எந்தவிதமான காயமும் இல்லை. இது குறித்து அவரிடம் விசாரணை செய்ய போது மலிவாக இருக்கிறது என்பதற்காக ஆயிரம் ரூபாய்க்கு சைனா செல்போனை வாங்கியதாகவும் முழு சார்ஜ் போட்டு விட்டு தனது பாக்கெட்டில் வைத்து இருந்த நிலையில் அந்த போன் வெடித்து சிதறியதாகவும் கூறினார்.
 
மலிவாக இருக்கிறது என்பதால் சைனா ஃபோனை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக குறைந்த விலையில் தரம் குறைந்த ஃபோன்களை வாங்கினால் இதுபோன்று வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva