காஷ்மீரில் நடைபெறும் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாது - சீன வெளியுறவுத்துறை
ஜி20 உச்சி மாநாடு மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் இதன் பெருமையை விளக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் கூட்டங்கள் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டபடி ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஜி-20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை, மந்திரிகள் அளவிலான மாநாடு ஏற்கனவே டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில், ஜி-20 மாநாட்டில் சுற்றுலாத்துறை தரப்பிலான மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீ நகரில் நாளை மறுநாள்( மே 22) முதல் வரும் மே 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இம்மா நாட்டில், ஜி20 நாடுகளைச் சேர்ந்த 50 க்கும் அதிகமான அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், சீனா காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்ததுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: சர்ச்சைக்குரிய பகுதியில் மாநாடு நடத்துவதை சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. காஷ்மீரில் நடைபெறும் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.