இலங்கை ராணுவத்துக்கு நாய்களை அனுப்பி வைத்த பெண்: எதற்கு தெரியுமா?
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பெண் ஒருவர் இலங்கை ராணுவத்திற்கு தான் வளர்த்து வந்த நாய்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை சுமார் 260 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவரான ஷிரு விஜெமானே வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இலங்கை ராணுவத்திற்கு தான் வளர்த்து வந்த ஐந்து ஜெர்மன் ஷெபர்ட் நாய்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.