வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (11:36 IST)

நடுரோட்டில் நாட்டு வைத்தியரை வெட்டிய இளம்பெண்ணின் கணவன்!! அதிரவைக்கும் காரணம்...

ஆண்டிப்பட்டியில் மருத்துவம் பார்க்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மணி(55) என்பவர் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். இவரது கிளினிக்கில் நிறைய பேர் மருத்துவம் பார்த்து செல்வர்.
 
அந்த வகையில் தேனியை சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மனைவி, மணியிடம் மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் செக்கப் செய்த போது மணி அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.
 
இதனால் அந்த பெண் அங்கிருந்து வெளியேறி தனக்கு நேர்ந்த கொடுமைகள கணவன் சின்ராஜிடம் கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த சின்னராஜ், ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து சின்னராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.