புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 மார்ச் 2018 (14:12 IST)

இளையராஜா இசையமைத்த படங்களின் பெயரில் உணவு வகைகள்: ஒரு வித்தியாசமான ஓட்டல்

இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான ஒருவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலின் மெனு வகைகளை தற்போது மாற்றி அமைத்துள்ளார். இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஓட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து அதிகளவில் வாங்கி சாப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய மெனு வகைகளை பார்ப்போமா!

அன்னக்கிளி: பூண்டு ரசம்
நான் கடவுள்: கீரை மசால்
மூடுபனி: அரிசி சாதம்
தாரை தப்பட்டை: புளிசாதம்
நாச்சியார்: பன்னீர் மிளகு மசாலா
தளபதி: பூசணி கூட்டு
நாயகன்: ஓட்ஸ் அல்வா

இளையராஜா இசையமைத்த ஸ்பெஷல் உணவுகளை ருசித்து சாப்பிட அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவதாகவும், இது அமெரிக்காவிலும் இளையராஜா ரசிகர்கள் அதிகம் இருப்பதை காட்டுவதாகவும், அந்த ஓட்டல் செஃப் மகேஷ்குமார் என்பவர் கூறியுள்ளார்.