வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (18:20 IST)

அஜித்துக்காக ரெண்டையும் முடித்துவிட்ட டி.இமான்

அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் திரைத்துறையினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விசுவாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் முடித்துவிட்டாராம். ஒன்று அஜித்தின் அறிமுகப்பாடல் இன்னொன்று டூயட் பாடல் என்று கூறப்படுகிறது

முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பதால் அவர் கூடுதல் சிரத்தையுடன் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கான தீம் மியூசிக்கும் தயாராகிவிட்டதாகவும், பில்லா, பில்லா 2 படங்களுக்கு இணையாக இந்த தீம் மியூசிக் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.