யுவன் – சிம்பு கூட்டணியில் நாளை வெளியாகிறது ‘ராஜா ரங்குஸ்கி’ பாடல்
தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. ‘மெட்ரோ’ சிரிஷ் ஹீரோவாக நடிக்க, சாந்தினி தமிழரசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அனுபமா குமார், சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய 'தரணிதரன்' இப்படத்தை வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல், நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது. யுவன் – சிம்பு மேஜிக்கல் காம்போவை ரசிக்க எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.