திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (10:59 IST)

வீட்டுச்சுவரில் உச்சா போன நாய்: ஓனரை பொளந்தெடுத்த தாத்தா

தனது வீட்டுச்சுவரில் நாய் சிறுநீர் கழித்ததால் முதியவர் ஒருவர் நாயையும் அதன் ஓனரையும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சுகுணா. சுகுணா தான் வளர்க்கும் நாயை வாக்கிங்கிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரது நாய் ஸ்ரீதர் என்ற முதியவர் வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் சுகுணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஸ்ரீதர், ஒரு தடியால் சுகுணாவையும் அவரது நாயையும் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் சுகுணாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து சுகுணா அளித்த புகாரின் பேரில் போலீஸார் முதியவர் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.