வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (10:30 IST)

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 3 மாத குழந்தை - கள்ளக்காதலனோடு சேர்ந்து கொன்ற தாய்

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 3 மாத குழந்தைதையை, அவரது தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது.
 
கார்த்திக் கோவையில் வேலை பார்த்து வருகிறார். சரவணம்பட்டியில் குடும்பத்தோடு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் வனிதாவிற்கு, அதே பகுதியில் இருக்கும் சீனிவாசன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று முன் தினம், வனிதா சீனிவாசனோடு உல்லாசமாக இருந்துள்ளார்.
 
அப்போது வனிதாவின் கைக்குழந்தை, விடாமல் அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, கள்ளக்காதலனான சீனிவாசனோடு சேர்ந்து ஒரு பாட்டில் இருமல் மருந்தை முழுவதுமாக குழந்தைக்கு கொடுத்துள்ளார். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. பின் வனிதா குழந்தையை அருகிலிருக்கும் குப்பைமேட்டில் வீசிவிட்டார்.
 
இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு சென்ற வனிதா அப்பாவி போல், வீட்டிலிருந்த தனது குழந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அவரின் நடவடிக்கையில் சந்தேகித்த போலீஸார், வனிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொன்றதை ஒப்புக் கொண்டார் வனிதா.
 
போலீஸார் வனிதாவையும், சீனிவாசனையும் கைது செய்துள்ளனர். அற்ப சுகத்திற்காக பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.