ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த நபர் ...
இந்தோனேஷியா நாட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது.
நம் நாட்டில் ஒருவர் ஒரு திருமணம் தான் செய்ய சட்டம் அனுமதி அளித்துள்ளது. விவாகரத்து சட்டப்படி பெற்ற பின்னர் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நம் நாட்டில் அனுமதி உண்டு. இந்நிலையில் இந்தோனேசியாவில் கடந்த 17 ஆம் தேதி, இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணம் நடைபெற்றது. அதில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்க அவர்கள் நடுவே ஒரு இளைஞர் அமர்ந்து திருமணம் செய்யும் காட்சிகள் இணயதளங்களில் வைரலானது. அதாவது இந்தோனேசியாவில் திருமணம் செய்துகொள்ளும் ஆண், திருமணம் செய்துகொள்ளும் பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பது அந்த நாட்டில் சட்டமாக உள்ளது.
இரு பெண்களை திருமணம் செய்துகொள்ளும் நபர் இந்த வரதட்சனைக்கு சம்மதம் தெரிவித்துதான் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்த நாட்டில் 4 பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள என அந்த் நாட்டு சட்டம் தெரிக்கிறது.